Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு மாற்ற முடிவு

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு மாற்ற முடிவு

இதனை ஏற்றுக்கொள்வது குறித்தோ அல்லது இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும் என்பது குறித்தோ மத்திய அரசு இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்புகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக முதல்வர் விஜய் வைத்த கோரிக்கையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) மனுவுக்கு அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: 

முதல்வர் விஜய், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம், பிரதமர் அலுவலகத்தால் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (ஏஏஐ) கருத்துகள் மற்றும் அறிக்கையைக் கேட்டுள்ளது. அதன் கருத்துகள் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், இந்த மனுவை ஏற்றுக்கொள்வது குறித்தோ அல்லது இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும் என்பது குறித்தோ மத்திய அரசு இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை, விமானங்கள் இயக்கம் மற்றும் சரக்குக் கையாளுகை திறன் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்க்க விமான நிலைய உட்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியமாகிறது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய சென்னை விமான நிலையத்தின் சேவைகளை மேம்படுத்த தனியார் பங்களிப்பைக் கோரி முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றும் இந்த முன்மொழிவுக்கு திமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சி அல்ல; வெறும் பராமரிப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மட்டுமே என்று மாநில சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

முந்தைய செய்தி
இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்குகிறார்கள்: பியூஷ் கோயல்
அடுத்த செய்தி
US credit outlook benign amid tighter funding conditions

தொடர்புடைய செய்திகள்